புதுவாழ்வு திட்டம் கலந்தாய்வு கூட்டம் : ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது!

ye0808P1

ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று புதுவாழ்வு திட்டம்- 2, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வு மற்றும் திட்ட விளக்க கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்திற்கு ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை தலைமை தாங்கினார். புதுவாழ்வு திட்டத்தை சேர்ந்த தாமோதரன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஏற்காடு களப்பகுதியில் உள்ள 9 ஊராட்சிகளில் புதுவாழ்வு திட்டம் -2, என்ற பெயரில் 2016 முதல் 2021 வரை திட்டம் செயல்படும் வகையில் தமிழக முதல்வரால் செயல்படுத்தப்பட உள்ளது.

கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் முன்மாதிரி ஊராட்சிகளாக இத்திட்டம் நடத்தப்படவுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாக இளைஞர்களை கண்டறிதல், தேவையான திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல், பண்ணைசார் மற்றும் பண்ணைசாரா தொழில்களை மேம்படுத்துதல், மாற்றுதிறனாளிகள் மற்றும் நலிவுற்றோரை மேம்படுத்துதல், மேலும், சுகாதார மேம்பாட்டு திட்டம் ஆகிய செயல்படுத்த உள்ள திட்ட விளக்கங்களை புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் தரணி கூறினர்.

இந்த கூட்டத்தில் ஏற்காடு பி.டி.ஓ.க்கள் மயில்சாமி, ஜெயராமன், ஏற்காடு துணை சேர்மேன் சுரேஷ் குமார், ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்டோரும் கிராம மக்களும் கலந்துகொண்டனர் .  

 -நவீன் குமார்.