ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியனின் சில்மிஷங்கள்!

ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன்.

ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன்.

திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் கார்த்திகாதேவி (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக பணம், நகைகள் மணப்பெண் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்டன. மேலும், மணிகண்டன் தொழில் செய்வதற்காக மாமனார் தனபால், மேலூர் அருகே தனது விவசாய நிலத்தில் 1 ஏக்கரை குத்தகைக்கு கொடுத்தார். 

மணிகண்டன் அந்த இடத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இந்த நிலையில் மனைவியிடம் அவரது வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால் கார்த்திகாதேவி, திருமணம் ஆன 4 மாதத்திலேயே கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை தனபால் திருப்பி கேட்டார். அப்போது அவர் திருப்பி கொடுக்க மறுத்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தனபால் புகார் அளித்தார். அதன்பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் கட்டப்பஞ்சாயத்து நடத்தியுள்ளனர். அப்போது ரூ.3 லட்சம் கொடுத்தால் நிலத்தை திருப்பி கொடுப்பதாக மணிகண்டன் கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து அவர் கேட்ட ரூ.3 லட்சம் பணத்தை தனபால் கொடுத்தார். ஆனால், நிலத்தை கூறியபடி திருப்பி ஒப்படைக்கவில்லை. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் தனபால் மீண்டும் புகார் கூறினார்.

அப்போது சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் இந்த விவகாரத்தில் மணிகண்டனுக்கு சாதகமாக செயல்பட்டதோடு, விசாரணை என்ற பேரில்  புகார் கொடுத்தவர்களை கடுமையாக மிரட்டியுள்ளார்.

இதற்கிடையில் கார்த்திகாதேவி தட்டச்சு பயிற்சிக்கு சென்ற போது, அவரை மணிகண்டனின் சகோதரர்கள் மிரட்டியதாகவும், கார்த்திகாதேவியை மணிகண்டன் காரில் கடத்தி செல்ல முயன்றதாகவும், ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகாதேவி புகார் கொடுத்தார்.

அப்போது புகாரை வாபஸ் பெறும்படியும், நிலத்தை கணவரது பெயருக்கே எழுதி கொடுக்கும்படி கார்த்திகாதேவியை இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மிரட்டியுள்ளார். மேலும், கார்த்திகாதேவியின் செல்போன் எண்ணுக்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் போன் செய்து இரட்டை அர்த்தத்தில் பேசி தொந்தரவு செய்துள்ளார். 

மருத்துவமனையில் கார்த்திகாதேவி.

மருத்துவமனையில் கார்த்திகாதேவி.

போலீஸ் நிலையத்திற்கு வரும் போது தனியாக வருமாறும், இரவு நேரத்தில் வெளியிடங்களுக்கு தனியாக வருமாறும் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன்     வற்புறுத்தியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த கார்த்திகாதேவி, கடந்த சனிக்கிழமை தூக்கமாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை பெற்றோர் காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகாதேவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போது தன்னுடைய சாவுக்கு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் தான் காரணம் என்றும், அதில் அவர் தனக்கு கொடுத்த தொந்தரவுகளையும் குறிப்பிட்டு கடிதமாக எழுதி வைத்திருந்தார். 

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மருமகன் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கார்த்திகாதேவியின் தாய் மணிமேகலை 20.07.2015 அன்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமியிடம் புகார் மனு கொடுத்து உள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

யார் இந்த சிவசுப்ரமணியன்?

                     இந்த வீடியோவில் உள்ள  காவல்துறை  உதவி ஆய்வாளர் வெற்றிவேல்  படுகொலைக்கு காரணமாக இருந்தவர்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.