நாகலாந்து திம்மாபூர் மத்திய சிறையை உடைத்து பாலியல் பலாத்கார குற்றவாளி கொல்லப்பட்ட சம்பவம் : இணையதளம், எஸ்.எம்.எஸ்.சேவைகளுக்கு தடை!

dimapurNAGALAND jail attackNAGALAND jail attack.jpg1

நாகலாந்தில், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையத் பரீத்கான் என்பவர் விசாரணைக் கைதியாக திம்மாபூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிறையை உடைத்து அவரை வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்றனர்.

அடித்துக் கொல்லப்பட்டவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக கரீம்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக திம்மாபூர் மத்திய சிறைசாலையின்  தலைமை சிறைக் கண்காணிப்பாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே பாலியல் பலாத்கார குற்றவாளி உத்தீன்கான் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம், எஸ்.எம்.எஸ். சேவைகள் ஆகியவை 48 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்லப்பட்ட சையத் சரீப் உத்தின்கானின் உடல் சொந்த நகரமான கரீம்கஞ்சிற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு இன்னும் தளர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.சதீஸ் சர்மா.