இலங்கையில் முகாமிட்டிருக்கும் சுப்ரமணியன் சுவாமி!

DefenceSeminarDefenceSeminar1DefenceSeminar2DefenceSeminar3“போருக்குப் பின் இலங்கை சவால்களும் பிராந்திய உறுதிப்பாடும்” என்ற தலைப்பில் நேற்று (03.08.2013) முதல் 3 நாள் கருத்தரங்கை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. இதில் 66 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் இருந்து கடும் போக்கு தமிழ் தேசிய எதிர்ப்பாளரான  சுப்பிரமணியன் சுவாமி உட்பட 20 பேர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை யுத்ததின் மூலம் இலங்கை அரசாங்கம் தோற்கடித்தமைக்கு இந்திய அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாக சுப்ரமணியன் சுவாமி கொழும்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள அவர், உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய போட்டியில் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அத்துடன் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அபிவிருத்தி இந்தியாவில் உள்ள தமிழ் மக்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்க இந்தியா தயாராகவுள்ளது என்றார்.

 

Leave a Reply