சென்னையில் 30 லட்சம் பணம் பறிமுதல் : போலீசார் விசாரணை!

block monyசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 27.08.2013 நள்ளிரவு ஒருவர் பிடிபட்டார். பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் ‘‘ஸ்கேனர்’’ கருவியில் அவரது பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சென்ட்ரல் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சையது அகமது சபீர் (47), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

அந்த நபர் சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். அங்கு கிடைக்கும் சம்பளம் தனது செலவுக்கு போதவில்லை என தனது நண்பர் சலீம் என்பவரிடம் கூறியுள்ளார்.

அவர் அதிக வருமானம் வரும் வழியை உனக்கு சொல்லித் தருகிறேன். நீ கஷ்டப்பட தேவையில்லை. ஒரு பையை தருவேன் அதை பாலக்காட்டிற்கு கொண்டு சென்றால் அங்கு வந்து ஒருவர் பையை பெற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார்.

சலீம் கூறியபடி பணத்துக்கு ஆசைப்பட்டு சையது இந்த வேலையை செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். அவர்களது திட்டத்தின்படி பையை கொண்டு வந்த போது ரெயில் நிலையத்தில் சிக்கி கொண்டார்.

அந்த பையில் 30 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து அந்த பணம் யாருடையது? யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply