காங்கிரஸ் எம்.பி., மாணிக்க தாகூரை கண்டித்து மாணவர்கள் முற்றுகை!

Manickvnr.studentvnr.student2vnr.student3vnr.student4இலங்கையில் தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை தமிழர்கள் பாதுகாக்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 30-ம் தேதி விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாகூர் அலுவலகத்தை மாணவர் கூட்டமைப்பினர் முற்றுகையிட சென்றனர்.

அப்போது எம்.பி. அலுவலகத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்கினர். சம்பவ இடத்தில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் தடியடி நடத்தி கலைத்தனர்.  இது தொடர்பாக எம்.பி. உதவியாளர் உள்பட சிலரை கைது செய்து பிறகு விடுவித்தனர். தாக்குதல் பற்றி தகவல் அறிந்து டெல்லியில் இருந்து எம்.பி. மாணிக்க தாகூர் விருதுநகருக்கு பறந்து வந்தார்.

இதற்கிடையே மாணவர்களை காங்கிரஸ் கட்சியினர் தாக்கிய போது பத்திரிகையாளர்கள் போட்டோ எடுத்திருந்தனர். இப்போது இந்த போட்டோக்களை வைத்து விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை என்று பல இடங்களில் ‘ தமிழனே தமிழனை அடிக்கலாமா? என்ற தலைப்பில் திடீர் போஸ்டர்கள் முளைத்துள்ளன.

எம்.பி. மாணிக்கம் தாகூரை கண்டித்து வாசகங்கள் இடம் பிடித்துள்ள அந்த போஸ்டரில் “திராணி இருந்தால் மீண்டும் விருதுநகரில் போட்டியிட்டு பாருங்கள்”, இப்படிக்கு அனைத்து கல்லூரி மாணவர்கள் என்ற வாசகங்கள் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து கல்லூரி மாணவர்கள் மீண்டும் எம்.பி.  அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக தகவல்கள் பரவியது. உடனே மதுரை ரோட்டில் உள்ள எம்.பி. அலுவலகத்தை சுற்றி போலீஸ் படை பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டது.

இந்தநிலையில் மாணவர் கூட்டமைப்பினர் 40 பேர் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக செல்ல முயன்றனர். உடனே விருதுநகர் டி.எஸ்.பி. சுலைமான் கலைந்து செல்லவில்லையென்றால் கைது செய்வோம் என்று சொல்லவும் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply