ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் : சி.பி.ஐ., விசாரணை!

AgustaWestlandelicotterihelicopterஇந்திய அரசு, இத்தாலி நிறுவனத்திடம், ஹெலிகாப்டர் வாங்கியதில், 400 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வெளியான தகவல், இந்திய அரசியலில், புயலை கிளப்பி உள்ளது. இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை, துவங்கியது. “”ஊழலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறியுள்ளார். பா.ஜ., கட்சி, “இது, இரண்டாவது போபர்ஸ் ஊழலாக உருவெடுத்துள்ளது’ என, கடுமையாக விமர்சித்துள்ளது.difesaelettronicaInterior-FinmeccanicaCEO_இத்தாலியைச் சேர்ந்த, “பின்னோ மெக்கானிக்கா’ என்ற நிறுவனம் மற்றும், அதன் துணை நிறுவனமான, “அகஸ்டா வெஸ்ட்லாண்ட்’ ஆகியவற்றுடன், இந்திய அரசு, 2010-ல், வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்கான, 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், 3,546 கோடி ரூபாய் மதிப்பிலானது. இதில், பெரும் ஊழல் நடந்ததாக, புகார் எழுந்தது. விசாரணையில், ஹெலிகாப்டர்கள் விற்பதற்கான ஒப்பந்தத்தை, இந்திய அரசிடமிருந்து பெற, 400 கோடி ரூபாய் அளவுக்கு, இந்திய அதிகாரிகளுக்கு, பின்னொ மெக்கானிக்கா மற்றும் அகஸ்டா நிறுவன உயரதிகாரிகள், லஞ்சம் கொடுத்தது, கண்டு பிடிக்கப்பட்டது.arest இதையடுத்து, பின்னொ மெக்கானிக்கா தலைவர், கிஸ்பி ஓர்சி, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் தலைவர், புருனோ ஸ்பேக்னோலினி ஆகியோர் 11.02.2013 இத்தாலியில் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழல் விவகாரம், இந்திய அரசியலில், பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த ஊழலில் தொடர்புடைய இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் யார் என்பது, மர்மமாக உள்ளது. இதுகுறித்து, 11.02.2013 சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை, 12.02.2013 துவங்கியது. இந்த ஒப்பந்தம் தொடர்பான, அனைத்து கோப்புகளையும் வழங்கும்படி, சி.பி.ஐ., அதிகாரிகள், ராணுவ அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளனர். கோப்புகள் கைக்கு கிடைத்தும், சி.பி.ஐ.,யின் அதிரடி நடவடிக்கைகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

a-k-antony-defends-india- இந்த விவகாரம் குறித்து, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியதாவது: ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, இத்தாலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணையை துவங்கி உள்ளது. இதில், முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து, மூன்று ஹெலிகாப்டர்கள் மட்டுமே, வாங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, ஒன்பது ஹெலிகாப்டரை வாங்கும் நடவடிக்கை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக, விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.,யின் முதல் கட்ட விசாரணை அறிக்கை கிடைத்ததும், முறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஒப்பந்த முறைகேட்டில், இந்திய விமானப் படை முன்னாள் தளபதி, தியாகிக்கு தொடர்புள்ளதா என்பது பற்றி, தற்போது எதுவும் கூற முடியாது.

அரசைப் பொறுத்தவரை, “நம் நாட்டின், ஒரு நையா பைசா கூட, வீணாக கூடாது’ என, நினைக்கிறது. ராணுவ தளவாட கொள்முதல் விதிமுறைப்படி, ஒப்பந்தம் நடந்துள்ளது. எனவே, இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், இத்தாலி நிறுவனத்துக்கு, நாம் செலுத்திய, ஒட்டு மொத்த தொகையையும், திரும்ப பெற முடியும். இந்த விவகாரம் தொடர்பாக, இத்தாலியில் உள்ள, இந்திய தூதரக அதிகாரியிடம் பேசியுள்ளோம். வழக்கு தொடர்பான, முக்கிய ஆவணங்களை, இத்தாலிய அரசிடமிருந்து, வாங்கி அனுப்பும்படி கூறியுள்ளோம். வெளியுறவு அமைச்சகமும், இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இந்த விவகாரத்தில், சிறப்பு பாதுகாப்பு படையான, எஸ்.பி.ஜி.,க்கும், தொடர்புள்ளதா என, கேட்கப்படுகிறது. விசாரணை விவரங்கள் கிடைக்கும் வரை, இது தொடர்பாக, எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.இவ்வாறு, அந்தோணி கூறினார்.

-எஸ்.சதிஸ்சர்மா

 

Leave a Reply