பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா புதிய அணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்!

Ganges-Brahmaputra-Meghna_basinsபிரம்மபுத்திரா ஆறு, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள  திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்போ என்ற பெயரில் புறப்பட்டு,  இந்தியா மற்றும்  வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து,  வங்காள விரிகுடாக் கடலில்  கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, 1700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000  மீட்டருக்கும் அதிகமாக  மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது.

China-to-construct-three-more-dams-on-Brahmaputraபிறகு நாம்சா படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந்நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்த பின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.

அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது.

1352044157-construction-work-on-brahmaputra-bogibil-bridge-at-dibrugrah-continuesவங்காளதேசத்தில் இந்த ஆறு  ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பொதுவாக இந்தியாவில் நதிகளை பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இந்த ஆறு  ‘புத்திரா’ என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் திபெத்தின் சாங்போ ஆற்றின் குறுக்கே சீனா மூன்று புதிய அணைகளை கட்டி வருவதை தடுத்து நிறுத்த வேண்டுமென இந்தியாவின் அருணாச்சலம் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

1352044155-construction-work-on-brahmaputra-bogibil-bridge-at-dibrugrah-continues_1352044156-construction-work-on-brahmaputra-bogibil-bridge-at-dibrugrah-continuesபிரம்மபுத்திரா நதியானது திபெத்தின் மேல் பகுதிகளின் பாசனத்திற்கும், அருணாச்சலப்பிரதேசத்தின் வழியாக வரும்போது அசாம் கீழ் பகுதிகளின் பாசனத்திற்கும் பயன்படுகிறது. இந்நிலையில் மேல்பகுதியில் மேலும் 3 அணைகளை சீனா கட்டுவது கீழ் பகுதிகளை பாதிக்கும்.

1352044160-construction-work-on-brahmaputra-bogibil-bridge-at-dibrugrah-continues1352044161-construction-work-on-brahmaputra-bogibil-bridge-at-dibrugrah-continuesசாங்போ நதியின் குறுக்கே சீனா அணைகள் கட்டுவதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுச் சூழலுக்கும் தீங்கு ஏற்படும். இதை  இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அருணாச்சலம் பிரதேசம் மற்றும் அசாம்  மாநில மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சனை, காவிரி நதி நீர் பிரச்சனை ஆகியவற்றின் பிரச்சனைகளையே தீர்க்க முடியாத மன்மோகன் தலைமையிலான மத்திய அரசு, சீனா அணைக்கட்டி வருவதை எவ்வாறு தடுக்கப் போகிறது? பொருத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
                                         

Leave a Reply