சவூதி அரேபியாவில் அமெரிக்க ஆளில்லா விமானத் தளம்! இரகசியம் அம்பலம்!

-central-intelligence-agency-united-statesஅமெரிக்கா உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., சவூதி அரேபியா நாட்டில் ஆளில்லா உளவு விமான நிலையத்தை இரகசியமாக நிர்வகித்து வந்த பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

drone fஇந்த விமானத் தளம்  கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது. இந்த விமான நிலையத்தின் ஆளில்லா உளவு விமானத்தின் உதவியுடன் தான், அல் கொய்தா இயக்கத்தின் தாக்குதல்களுக்கு எல்லாம் திட்டம் வகுத்து தந்த, அன்வர் அல்-அவ்லாகி, கடந்த 2011- செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டான் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

sec1991-ம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரில் பங்கேற்க, சவூதி அரேபியாவிற்கு சென்ற சுமார் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள், 2003-ம் ஆண்டு அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது அங்கே அமெரிக்க ராணுவ பயிற்சி மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக இயங்கி வருகிறது.

threedroonesஇந்நிலையில், சவூதி அரேபியா அரசுக்கே தெரியாமல் இந்த விமான நிலையத்தை சி.ஐ.ஏ. ரகசியமாக நிர்வகித்து வந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அமெரிக்க ஊடகங்களுக்கு 2011-ம் ஆண்டின் போதே தெரிந்திருந்தும், அவை  இது பற்றிய செய்திகளை வெளியிடவில்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

சி. அரவிந்தன்.

Leave a Reply