தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
இதன்படி அரியலூர் மாவட்ட கலெக்டராக லட்சுமி பிரியா, நீலகிரி மாவட்ட கலெக்டராக இன்னசென்ட் திவ்யா, சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சுதாதேவி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனராக ஜெயச்சந்திரா பானு ரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை துணை செயலாளராக கிரண்குராலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
