சட்ட விரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபட்ட 5  இலங்கை  மீனவர்கள்  கைது!

sl. sl.1

இலங்கை வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால், வங்காலை நாரபாடு கடல் பகுதியில், சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபட்ட 5  இலங்கை  மீனவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீன் பிடிக்க பயன்படுத்திய  படகுகள் மற்றும் 500 மீட்டர் நீளமான சட்ட விரோதமான ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் பொருட்கள் ஆகியன சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துணை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

-வினித்.