அடிப்படை வசதிகள் இல்லாத திடக்கழிவு பதப்படுத்தும் கூடம்!

20170428_12122820170428_115744 20170428_120004 20170428_120110 20170428_120220 20170428_120342 20170428_120949 20170428_121141

வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா, கலவை பேரூராட்சி வளமீட்பு பூங்கா அலுவலகத்தில் திடக்கழிவுகளை பதப்படுத்துவதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், திடக்கழிவுகளை பதப்படுத்துவதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படாமல், தரமற்ற முறையில் தளம் போடப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான முதல் உதவி பெட்டியோ அல்லது மருத்துவக்காப்பீடு போன்ற அத்தியாவசிய வசதிகள் எதுவும் இல்லை.

கழிவுகளைப் பதப்படுத்துவதற்கான அடிப்படை தேவையான தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தவில்லை. மின்சார மீட்டர்கள் இணைப்பு உள்ளது ஆனால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கவனிப்பார்களா?

-சி. ரஜினிகாந்த்.

-எம்.ராம்ராஜ்.