புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டத்துக்கு தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
நெடுவாசல் பகுதியில் போராடி வரும் பொதுமக்களுடன் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் தரையில் அமர்ந்திருந்தார்.
விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பேசினார்.
-கே.பி.சுகுமார்.
