தமிழர்களுக்கு விரோதமாகவும், தமிழக உரிமைகளுக்கு எதிராகவும் பேசுவதையே தன் வாழ்நாள் சாதனையாக நினைத்து தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமி, காவிரி நதி நீர் பிரச்சனையிலும் தனது புரோக்கர் புத்தியைக் காட்டியுள்ளார்.
“தமிழகம் காவிரி நீர் கேட்டு புலம்புவதை விட்டு விட்டு, கடல் நீரை சுத்தீகரிப்பு செய்து அதனை குடிப்பதற்கும், விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தனது “ட்விட்டர்” பக்கத்தில், தமிழன துரோகி சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் இயற்கையாக ஓடி வரும் காவிரி நதி நீரை தடுக்காதீர்கள், கடல் நீரை சுத்தீகரிப்பு செய்து அதனை குடிப்பதற்கும், விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று, இதே ஆலோசனையை கர்நாடகா அரசாங்கத்திடம் சுப்பிரமணியன் சுவாமி சொல்ல வேண்டியதுதானே?
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
