தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து மேலாண்மை சேவைகளை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

தேசிய நெடுஞ்சாலைகளில் அவசரகாலச் சேவைகளை வலுப்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே விபத்து மேலாண்மை சேவைகள் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும், விபத்துகள், வாகனப் பழுதுகள், பிற அவசரகாலங்களின் போது தேசிய நெடுஞ்சாலைப் பயனர்களுக்கு உரிய நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விபத்து மேலாண்மை சேவைகளில் ஆம்புலன்ஸ்கள், ரோந்து வாகனங்கள், பழுதடைந்த வாகனங்களை இழுத்துச் செல்லும் கிரேன்கள் ஆகியவை அடங்கும். களத்தில் உள்ள குழுக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் 1033 தேசிய நெடுஞ்சாலை உதவி எண்ணுடன் ஒருங்கிணைப்பதன் மூலமும், உள்ளூர் காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமும் இச்சேவைகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் விபத்துகள் குறித்த தரவுகள், தேவையின் அடிப்படையில் சுங்கச்சாவடிகள், பொருத்தமான இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்படுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில், மையப்படுத்தப்பட்ட முகமை மூலம் ஆம்புலன்ஸ்கள் பணியமர்த்தப்படும். ரோந்து வாகனங்கள், கிரேன்கள் தனி ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாகவோ அல்லது நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாகவோ ஏற்பாடு செய்யப்படும்.

இதைத் தவிர, ஆணையத்திடம் ஒப்படைக்கப்படாத ஆனால் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி ஆம்புலன்ஸ்கள் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட ஆணையத்தால் ரோந்து வாகனங்கள், கிரேன்கள் ஏற்பாடு செய்யப்படும். இந்த முன்முயற்சியின் மூலம் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பயனர்களுக்கு உரிய நேரத்தில் உதவி வழங்கி, ஒட்டுமொத்தப் பாதுகாப்பை மேம்படுத்த ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply