நிலச்சரிவு மேலாண்மையில் முனேற்றம் கண்டுள்ள இந்தியா: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.

சர்வதேச நிலச்சரிவுகள் தடுப்பு கூட்டமைப்பு, அமிர்த விஸ்வ வித்யாபீடம் சார்பில், ஃபரிதாபாத்தில் 7வது உலக நிலச்சரிவு கருத்தரங்கு 2026 நவம்பர் 22 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், 75க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நிபுணர்கள், விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதன் தொடக்க அமர்வில் பங்கேற்று பேசிய மத்திய அறிவியல், தொழிநுட்பம், புவி அறிவியல் துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், நிலச்சரிவு மேலாண்மையில் இந்தியாவின் அணுகுமுறை மாறி வருவதாக குறிப்பிட்டார். பேரிடருக்கு பின் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் நிலை மாறி, பேரிடர் தடுப்பை நோக்கி படிப்படியாக உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக கருதப்படும்  4.3 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆய்வு செய்து, அதை வரைபடமாக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். சுமார் 91 ஆயிரம் நிலச்சரிவுகளின் பட்டியல் தொகுதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள தேசிய நிலச்சரிவு முன்னறிவிப்பு மையம், தனது முன்னறிவுப் பணிகளை 20 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தியதாகவும் குறிப்பிட்டார். 15 மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி மதிப்பில், தேசிய நிலச்சரிவு தட்டுப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். செயற்கை நுண்ணறிவு, புவிசார் தொழில்நுட்பங்கள், செயற்கைகோள் கண்காணிப்பு, இறுதிக்கட்ட எச்சரிக்கை ஆகியவை நிலச்சரிவை தடுப்புத்திறனை வலுப்படுத்தும் என்றும் மத்திய அமைச்சர் திரு ஜிஜேந்திர சிங் தெரிவித்தார்.      

Leave a Reply