இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் ஜெர்மனி பிரதமர் பிரீட்ரிக் மெர்ஸ் தொலைபேசியில் பேச்சு.

இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன், ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசின் பிரதமர் திரு. பிரீட்ரிக் மெர்ஸ் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

இந்தியா – ஜெர்மனி இடையிலான வியூகக் கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தொடர் சந்திப்புகளில் நிலவி வரும் முன்னேற்றம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான தூதரக உறவுகள் தொடங்கி இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதைச் சுட்டிக்காட்டிய இரு தலைவர்களும், பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், வியூகக் கூட்டாண்மையை வலுப்படுத்தவும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்தனர்.

மேலும், இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்குப் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கும் பொதுவான அக்கறை கொண்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் விதிகள் சார்ந்த சர்வதேச ஒழுங்கை மேம்படுத்த இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர்.

அத்துடன், தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் பலதரப்பு சர்வதேச அமைப்புகளில் தொடர்ந்து ஒத்துழைப்புடன் செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

Leave a Reply