இந்தியா- நேபாள கூட்டு ராணுவப் பயிற்சி நேபாளத்தில் வெற்றிகரமாக தொடங்கியது.

default

இந்தியா, நேபாள கூட்டு ராணுவ பயிற்சி நேபாள நாட்டின் ஜல்ஜண்டி பகுதியில் உள்ள நேபாள ராணுவப் போர் பயிற்சி பள்ளியில் இன்று தொடங்கியது. சூர்யகிரண் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது, 2026 டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேபாள ராணுவத்தின் மத்திய மேற்கு பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பூர்ண பகதூர் கத்ரி தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இப்பயிற்சியில் இந்தியா, நேபாளத்தை சேர்ந்த தலா 334 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இருநாட்டு வீர்ரகளும் சவாலான நிலப்பரப்புகளில் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இருநாட்டு படைகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறன், பரஸ்பரபுரிதலை மேம்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். ஹெலிகாப்படர் மூலம் பயிற்சி, பேரிடர் மீட்பு, மருத்துவப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. போர் முறைகளை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்பங்களை கையாளுவது உள்ளிட்ட அனுபவங்களையும் இருநாட்டு வீரர்களும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

சூர்யகிரண் பயிற்சி என்பது இந்தியாவிலும் நேபாளத்திலும் மாறி மாறி நடத்தப்படும் கூட்டு ராணுவ பயிற்சியாகும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ராணுவப் பயிற்சியானது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும். இருதரப்பு ராணுவங்களுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கை, தோழமையை வளர்த்து, பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும்  என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply