வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள வலுவான உலகளாவிய கல்விசார் கூட்டாண்மை அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்.

புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் பள்ளி, தில்லி பல்கலைக்கழகத்தின் தில்லி பொருளாதாரப் பள்ளி மற்றும் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்  பரிமாற்ற விழாவில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரும், தில்லி பல்கலைக்கழக வேந்தருமான திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சமகாலப் பொருளாதார மற்றும் சமூக சவால்களைத் தீர்க்க கல்விசார் சிறப்பையும் ஆராய்ச்சித் திறன்களையும் ஒன்றிணைக்கும் முக்கிய மைல்கல்லாக இக்கூட்டாண்மை அமையும் என்றார். இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான கூட்டு ஆராய்ச்சி விதை நிதி மற்றும் நிலைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு, பொதுக் கொள்கை, சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள ஒத்துழைப்பை அவர் வரவேற்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், ‘வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047’ இலக்கை அடைய அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம் என்றார். கல்விசார் சிறப்பு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் எனவும், இன்றைய இளைஞர்கள் இந்தியாவையும் மனிதகுலத்தையும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply