தமிழ்நாட்டில் உயர்கல்வி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.01 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆலந்தூரில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்தப் புதிய கல்லூரி அமைப்பதன் மூலம் ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் தங்கள் பகுதிக்கு அருகிலேயே உயர்கல்வியைத் தொடர இந்த முயற்சி உதவியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் இந்தக் கட்டுமானப் பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
கே.பி.சுகுமார்
