இந்தியக் கடற்படை தனது நீண்டதூர கடல்சார் உளவு நடவடிக்கைகளின் பொன்விழாவை 2026 நவம்பர் 18 அன்று கொண்டாடுகிறது. இந்த சிறப்பம்சம் ஆல்பட்ராஸ் என்ற இந்திய கடற்படையின் விமானப்படைப் பிரிவு (ஐஎன்ஏஎஸ்) 312 செயல்பாட்டிற்கு வந்த 50 ஆண்டுகளைக் குறிக்கிறது. அத்துடன் இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஆதரவாக 50 ஆண்டுகளாக வான்வளியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பையும் நினைவுகூர்கிறது.
1971-ம் ஆண்டு போருக்குப்பின் கப்பல்கள், ஹெலிகாப்டர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய கடல்சார் ரோந்து விமானங்களின் தேவை இருந்ததால் நீண்டதூர கடல்சார் உளவுப்பணிக்கான பொறுப்பைக் கடல்படை ஏற்றது. 1976-ம் ஆண்டு நவம்பர் 18 அன்று இந்திய விமானப்படையின் 5 லாக்ஹீட் சூப்பர் கன்ஸ்டலேசன் விமானங்களுடன் கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சாவில் ஐஎன்ஏஎஸ் 312 படைப்பிரிவு பணியில் சேர்க்கப்பட்டது.
1977-ம் ஆண்டு இல்யூசின் 2 – 38 விமானம் இணைக்கப்பட்டதன் மூலம் கடற்படையின் கடல்சார் உளவு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்த் திறன் வலுப்படுத்தப்பட்டது. 1988-ம் ஆண்டு ஐஎன்ஏஎஸ் 312-ல் இணைக்கப்பட்ட டுபோலேவ் டு – 142 எம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படையின் ரோந்துப் பணியை விரிவுப்படுத்தியது. 2013-ம் ஆண்டு அரக்கோணத்திலுள்ள ஐஎன்எஸ் ராஜாளியில் இணைக்கப்பட்ட போயிங் பி – 81 விமானம் உளவுப்பணியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
திவாஹர்
