மருந்துகள், மருத்துவச் சாதனங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட தளங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் 1945-ம் ஆண்டு மருந்து விதிமுறைகளில் 43ஏ விதியில் திருத்தம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. இத்திருத்தம் இறக்குமதி நடவடிக்கைகளை சுமூகமாக்குவதையும், போக்குவரத்து திறனை மேம்படுத்துவதையும், சுகாதாரநலன் பராமரிப்புச் சார்ந்த பொருட்களுக்கான விநியோகத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
1945-ம் ஆண்டு விதிமுறைகளில் விதி 43ஏ, இந்தியாவில் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலைகளை கடந்து செல்லுதல் உள்பட இதர தளங்களை குறிப்பிடுகிறது. வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், இறக்குமதி தொடர்பான நடைமுறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் கூடுதலாக உள்நாட்டு பெட்டக கிடங்குகள், சிறப்பு பொருளாதார மண்டலம், ஒரு சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் சேர்க்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஹரியானாவில் சோனிபட், பியாலா, ஹர்ஷ்சாருவில் உள்நாட்டு பெட்டக கிடங்குகள், உத்தரப் பிரதேசம் மாநிலம் தாத்ரியில் உள்நாட்டு பெட்டக கிடங்கு, குஜராத்தில் காந்திதாம் உள்நாட்டு பெட்டக கிடங்கு, தெலங்கானா மாநிலம் ஹதரபாத்தில் சனத் நகர் மற்றும் திம்மாபூரில் உள்நாட்டு பெட்டக கிடங்கு, கர்நாடாகாவில் பொம்மசந்திராவில் சிறப்பு பொருளாதார மண்டலம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா சர்வதேச விமான நிலையம் ஆகியவை கூடுதல் தளங்களாக முன்மொழியப்பட்டுள்ளன.
திவாஹர்
