புதுப்பேட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 13,676 பேருக்கு சுமார் ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார்.
கட்டியாவயல் பகுதியிலிருந்து ரோடு ஷோ மூலம் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்த அவர், அங்குள்ள கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் ரூ.68.31 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட 44 முடிவுற்ற புதிய திட்டங்களைத் திறந்து வைத்தார்.
ரூ.11.72 கோடி மதிப்பில் 70 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
கே.பி.சுகுமார்
