அகமதாபாத் – காந்திதாம் ரயில் வழித்தடத்தில் செல்பேசி இணைப்பின் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது.

ஜூன் 2026-ல் அகமதாபாத் முதல் காந்திதாம் வரையிலான ரயில் பாதையில் நடத்தப்பட்ட இயக்கச் சோதனை முடிவுகளை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமமான டிராய் வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் செல்பேசி வலையமைப்பு சேவைகளின் நேரடித் தரத்தை மதிப்பிடுவதும் சரிபார்ப்பதுமே இந்தச் சோதனையின் நோக்கமாகும். இந்தச் சோதனையின்போது, கவரேஜ், அழைப்பு துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பின் வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றவேகம் போன்ற முக்கிய சேவை தர அளவீடுகள் அடிப்படையில் சேவை வழங்குநர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

நியமிக்கப்பட்ட முகமை மூலம், 2026 ஜூன் 30 அன்று அகமதாபாத் முதல் காந்திதாம் வரையிலான ரயில் பாதையில் 300 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய சோதனையை டிராய் நடத்தியது. ஆணையத்தின் ஜெய்ப்பூர் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவுகள், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் பகிரப்பட்டுள்ளன. இந்த இயக்கச் சோதனை குறித்த விரிவான அறிக்கையை www.trai.gov.in என்ற டிராய்-ன் இணையதளத்தில் அணுகலாம்‌.

Leave a Reply