தேசிய மாணவர் படை சார்பில் யோகா தினக் கொண்டாட்டம் – நாடு முழுவதும் 8.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தேசிய மாணவர் படை (என்சிசி) 12-வது சர்வதேச யோகா தினத்தை நாடு முழுவதும் உற்சாகத்துடனும் தேசபக்தி உணர்வுடனும் கொண்டாடியது. நாடு தழுவிய அளவில் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த யோகா அமர்வுகளில் 8.30 லட்சத்திற்கும் அதிகமான என்சிசி கேடட்கள், பயிற்றுநர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். இதன் மூலம், இளைஞர்களிடையே உடல் தகுதி, மனநலம், முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் அந்த அமைப்பு தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இந்த யோகா அமர்வுகள், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, பீகாரில் உள்ள போத்கயா, மும்பையில் உள்ள வான்கடே மைதானம், குவஹாத்தியில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றங்கரை, வாரணாசியில் உள்ள நமோ படித்துறை, கொல்கத்தாவில் உள்ள மில்லினியம் பார்க், சண்டிகரில் உள்ள சுக்னா ஏரி, சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரியக் கோயில் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்பட்டன.

ஒழுக்கமான, தன்னம்பிக்கையுள்ள, சமூகப் பொறுப்புள்ள மக்களை வளர்ப்பதன் மூலம், தேசத்தைக் கட்டமைப்பதில் என்சிசி ஒரு முக்கியப் பங்கைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது. தனது பல்வேறு செயல்பாடுகளின் மூலம், என்சிசி உடற்தகுதி, சுய ஒழுக்கம், கூட்டு நல்வாழ்வு ஆகிய விழுமியங்களை ஊட்டி வருகிறது.

Leave a Reply