நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். ‘முதலமைச்சர் விஜயை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து அவருடன் செஸ் விளையாடினேன்’ என பிரக்ஞானந்தா பேட்டியளித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது, கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
கே.பி.சுகுமார்
