தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய் அவர்களை ஆட்சி அமைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதை அடுத்து மே 10 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். அவருடன் இணைந்து அவரது முக்கிய சகாக்களும் குறைந்த எண்ணிக்கையில் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றவுடன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.
பதவி ஏற்பு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நெருக்கடிகளையும், அடக்குமுறைகளையும், தன் மௌனத்தின் மூலம் அமைதியாகவும், பொறுமையாகவும், சகிப்புத்தன்மையுடன் எதிர்கொண்டு மலை குலைந்தாலும்; நிலை குலையாத மனதுடன் நெருப்பாற்றில் நீந்தி, மாபெரும் மக்கள் சக்தியுடன் மகத்தான வெற்றிப் பெற்று; தமிழக அரசியலில் மாபெரும் வரலாற்றுச் சாதனைப் படைத்து, தமிழ்நாட்டு மக்களின் தலைமைத் தொண்டனாக முதலமைச்சர் என்னும் முள் கிரீடத்தை மகிழ்ச்சியோடும், மன தைரியத்தோடும் மக்களுக்காக சுமக்க வந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது உள்ளாட்சித்தகவல் மற்றும் UTL MEDIA செய்திக் குழுமத்தின் சார்பாக புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
இதுத் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் “கிளிக்” செய்யவும்.
https://www.ullatchithagaval.com/2026/05/09/119956/
