பீகாரில் லிச்சி விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு- மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் உத்தரவு.

பீகாரில் லிச்சிப் பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளகான் உத்தரவிட்டுள்ளார். லக்னோவில் உள்ள மத்திய மிதவெப்ப மண்டல தோட்டக்கலை நிறுவனத்தில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று (07.05.2026) அவர் பங்கேற்றார். அப்போது பீகாரில் லிச்சி விவசாயிகள் பூச்சி தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாவதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய தீர்வுகளுடன் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் நிபுணர் குழு அமைக்க அமைச்சர் உத்தரவிட்டார். இந்தக் குழு லிச்சிப் பயிர்களில் பூச்சி தாக்குதலைப் பார்வையிட்டு இழப்புகளை ஆய்வு செய்து நிவாணரம் வழங்குவது குறித்து பரிந்துரை செய்யும். அமைச்சரின் உத்தரவு படி வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளகானிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply