தொழிலாளர் சட்டங்களின் கீழ், நாடு முழவதிலும் உள்ள 40 வயதுக்கு மேல் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், வருடாந்தர சுகாதார பரிசோதனைத் திட்டத்தை, தில்லியில் பசைதராபூரில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (07.05.2026) தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கான பணி் சார்ந்த சுகாதார சேவைகள் வலுப்படுவதும் சமூகப் பாதுகாப்பிற்கான முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் கண்ணியம், நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதியான செயல்பாடுகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
அனைத்து தொழிலாளர்களுக்குமான சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும் இந்த தினம் தொழிலாளர்களின் வலிமைக்கு மதிப்பளிக்கும் வகையில், அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் தொழிலாளர்கள் மற்றும் இளையோரின் நலன்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் நலத்திட்டங்கள் மூலம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் 19-லிருந்து 64 சதவீதமாக அதிகரித்து 94 கோடி பேர் பயனடைந்துள்ளதாக அவர் கூறினார். தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் சுகாதாரக் காப்பீடு 7 கோடியிலிருந்து 15 கோடி பயனாளர்களை சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசுமேற்கொண்டு வரும் தொழிலாளர் திட்டங்களின் ஒரு முக்கிய முன்முயற்சியாக 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் இலவச சுகாதார பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
எம்.பிரபாகரன்
