ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களால் மூன்று இந்தியர்கள் காயமடைந்ததை பிரதமர் திரு நரேந்திர மோடி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பொதுமக்களையும் உள்கட்டமைப்புகளையும் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள 2026முடியாதது என்று அவர் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா உறுதுணையாக நிற்கிறது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான தீர்வு காண்பதற்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதாகவும் திரு மோடி தெரிவித்தார்.
நீடித்த பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பிற்கு, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தினார்.
X பதிவில், திரு மோடி கூறினார்;
ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களில் மூன்று இந்தியக் குடிமக்கள் காயமடைந்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்களையும் உள்கட்டமைப்புகளையும் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறுதியான ஆதரவைத் தெரிவிப்பதோடு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான தீர்வு காண்பதற்கான தனது ஆதரவையும் மீண்டும் வலியுறுத்துகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது, நீடித்த பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
திவாஹர்
