இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் 2026 ஏப்ரல் 13 முதல் 16 வரை குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிற்குப் பயணம் மேற்கொள்வார்.
ஏப்ரல் 13 அன்று, எய்ம்ஸ் ராஜ்கோட்டின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
ஏப்ரல் 14 அன்று, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காந்திநகர் லோக் பவனில் நடைபெறும் ‘சமூக சமுதாய மகோத்சவத்தில்’ குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். அதே நாளில், காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.
ஏப்ரல் 15 அன்று, குடியரசுத் தலைவர் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வார். அதே நாளில், நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரிகள் அகாதமியில் நடைபெறும் இந்திய வருவாய் சேவை (வருமான வரி) அதிகாரி பயிற்சி பெறுபவர்களின் 78வது தொகுதிக்கான பிரிவு உபச்சார விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.
திவாஹர்
