தேசிய நெடுஞ்சாலை கட்டணச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை செயல்படுத்தப்பட்டது.

சுங்கக் கட்டண வசூலில் செயல்திறனையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளில் அனைத்துப் பயனர் கட்டணங்களும் 10.04.2026 முதல் ஃபாஸ்டேக் (FASTag) அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) எனும் டிஜிட்டல் முறைகள் மூலம் மட்டுமே செலுத்தப்படுகின்றன. இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் தேர்தல் காரணமாக அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இந்த மாற்றம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

Leave a Reply