கடந்த 11 ஆண்டுகளில், இந்த நலத்திட்டத்தின் கீழ் ₹40 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ₹58 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சிறு வணிகர்களுக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் பிணையமில்லாக் கடன்களை வழங்கி வலுவூட்டியுள்ளது என்றும், அதன் மூலம் சுயதொழில் மற்றும் சிறு தொழில்களுக்குப் புதிய உத்வேகம் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

‘X’ தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், திரு அமித் ஷா இவ்வாறு கூறினார், “முத்ரா திட்டத்தின் 11 ஆண்டுகளில், திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சிறு வணிகர்களுக்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கும் பிணையமில்லாக் கடன்களை வழங்கி வலுவூட்டியுள்ளது. இதன் மூலம் சுயதொழில் மற்றும் சிறு தொழில்களுக்குப் புதிய பலம் அளித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், இந்த நலத்திட்டத்தின் கீழ் ₹40 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் ₹58 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 12 கோடி இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், தற்சார்பு இந்தியாவைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு இது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. முத்ரா கடன்களில் மூன்றில் இரண்டு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் தற்சார்பை நோக்கிய ஒரு வரலாற்றுச் சாதனையாகும்

Leave a Reply