திமுகவினரின் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி! ஹெச்.ராஜாவிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோதி!

அரசியலில் எப்போதும் பரபரப்பாகவும், பதட்டமாகவும், மிகவும் துடிப்பாகச் செயல்பட்டு வந்த பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்..ராஜா, கடந்த 30 ஜனவரி 2026 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென மயங்கி விழுந்ததால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு Stroke ஏற்பட்டதால் லேசானப் பக்கவாத அறிகுறிகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
  • தொடக்கத்தில் கவலைக்கிடமாக இருந்தாலும், பின்னர் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய ஹெச். ராஜா, காய்ச்சல் காரணமாக மார்ச் மாதம் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில் அரசியலில் கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியில் எதிரும், புதிருமாக இருக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூட அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஹெச். ராஜாவிடம் நலம் விசாரித்தார். ஆனால் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் ஹெச். ராஜாவிடம் நலம் விசாரிக்கவில்லை என்ற விமர்சனம் திமுக தரப்பினரால் திட்டமிட்டு தீவிரமாகப் பரப்பப்பட்டது. இது தமிழக பாஜக தலைமைக்கும், ஹெச். ராஜாவிற்கும் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.

இத்தகவல் பாஜகவின் தேசிய தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 03.04.2026 அன்று புதுச்சேரி தேர்தல் பரப்புரைக்காக வந்த பிரதமர் நரேந்திர மோதி, ஹெச். ராஜாவிடம் நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு ஹெச்.ராஜாவுக்கு உண்மையிலுமே உற்சாகத்தை அளித்துள்ளது.

ஹெச்.ராஜாவின் துணிச்சலான அடாவடி பேச்சிலும், அவரது வாத திறமையிலும் ஆயிரம் கருத்து வேறுபாடு, முரண்பாடு மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும், ஏற்றுக்கொண்ட கொள்கையில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார். இந்நிலையில் கடந்த மூன்று மாத காலமாக அவரது அமைதி, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்..ராஜா இல்லாத இந்த தேர்தல் தமிழக அரசியலை களையிழக்கச் செய்துள்ளது.

தற்போது 68 வயதாகும் ஹெச்.ராஜா உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முழுமையாக் குணமடைந்து விரைவில் தீவிர அரசியலுக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.

Leave a Reply