தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை (02 ஏப்ரல் 2026) தொடங்க இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளில் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள மரக்கடை பகுதியில் நடைபெற்று வரும் களப்பணிகளை தவெகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சற்று முன் (01 ஏப்ரல் 2026,11.55 மணி அளவில்) நேரில் பார்வையிட்டு தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
நடைபெற்று வரும் பணிகளை திருச்சிராப்பள்ளி மாநகர போலீசார் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
02.04.2026, வியாழக்கிழமை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை, தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யும் பணியில் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்..
இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் நபர்கள் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது என்றும், மேலும இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
