சிங்ரௌலியைத் தலைமையிடமாகக் கொண்ட கோல் இந்தியாவின் முதன்மை அங்கமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (என்.சி.எல்), 2025-26 நிதியாண்டில் தனது 140 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி என்ற ஆண்டு இலக்கை, 2026 மார்ச் 30 அன்று (முதல் ஷிப்டுக்குப் பிறகு) திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே அடைந்துள்ளது . தனது 10 உயர் இயந்திரமயமாக்கப்பட்ட திறந்தவெளிச் சுரங்கங்களுடன், என்.சி.எல் ஒரு தசாப்த காலமாக ஆண்டு நிலக்கரி உற்பத்தி இலக்குகளை அடையும் தனது பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது.
கோல் இந்தியா லிமிடெட்டின் முதன்மைத் துணை நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL), இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பைப் பேணுவதில் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்துள்ளது. தற்போதைய எரிசக்திச் சூழலில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி, இந்தியாவின் மின்சாரத் துறைக்கு நம்பகமான முதுகெலும்பாக மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளது. இந்தச் சூழலில், அனல் மின் நிலையங்களுக்குத் தடையற்ற நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதில், NCL-இன் சீரான மற்றும் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது.
இந்தச் சாதனைக்காக, NCL நிர்வாகம், NCL குழுவினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் அயராத முயற்சிகளையும், ஒத்துழைப்பு நல்கிய பங்குதாரர்களையும் பாராட்டியது.
திவாஹர்
