அசாமின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதி ஆணைய மானியமாக ரூ. 299 கோடி விடுவிப்பு.

2025-26-ம் நிதியாண்டில் அசாமில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்/கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசின் 15-வது நிதி ஆணைய மானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. இது 2025-26-ம் நிதியாண்டின் 2-வது தவணையான ₹256.60 கோடியை உள்ளடக்கியது.

இந்த நிதி, தகுதியுள்ள 27 மாவட்ட பஞ்சாயத்துகள், 2192 கிராம பஞ்சாயத்துகள், போடோலாந்து பிராந்திய கவுன்சில், கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும். மேலும், 2025-26-ம் நிதியாண்டிற்கான 1-வது தவணையாக ₹42.70 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த மானியம் சுகாதாரம், கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்கல், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி போன்ற அடிப்படை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

Leave a Reply