சர்வதேச மகளிர் தினத்தில் சிறப்பு சுகாதார வசதிகள் கோவா அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் தொடங்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதையும் சிறப்பு ஆயுர்வேத சேவைகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல சிறப்பு சுகாதார வசதிகளைத் தொடங்கியது. இந்த வசதிகளை கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் திறந்து வைத்தார். மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்ய ராஜேஷ் கோடேச்சா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பிரமோத் சாவந்த், “கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் உள்ள 100 இளங்கலை இடங்களில் 50% வரை கோவா மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். நவீன சுகாதாரப் பராமரிப்புடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் உறுதிபூண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கோவா அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள் திறப்பு நோயாளிகளின் சிகிச்சை கணிசமாக மேம்படுத்துவதோடு, மக்களுக்கு சிறப்பு ஆயுர்வேத சிகிச்சைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும் என்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுர்வேதத்தை விரிவுபடுத்துவதற்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு முழுவதும் ஆயுர்வேத உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஆயுஷ் அமைச்சகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.  கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகள் ஒருங்கிணைந்த சிகிச்சை அணுகுமுறைகள் மூலம் நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்

Leave a Reply