தோட்டங்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமையானவை என்றும், இதனால் மகசூல் குறைந்து வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதுதவிர, வேர் வாடல், வெள்ளை ஈ போன்ற நோய்களும் தென்னை விவசாயத்தை மோசமாக பாதிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் தென்னையின் உற்பத்தித்திறனைப் அதிகரிக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் புதுமையான தீர்வுகளையும் நாடி, இந்த சவால்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சவால்களை எதிர்கொள்ள, புதிய, மேம்பட்ட, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட தென்னை வகைகளை உருவாக்குவதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும் என்று திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார். உலக தேங்காய் ஏற்றுமதி சந்தையில் இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேங்காய் உற்பத்தி, தரம் இரண்டையும் அதிகரிப்பதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
திவாஹர்
