தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 5,000-க்கும் அதிகமான பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பாலின உள்ளடக்கம் மற்றும் சமூக அதிகாரமளித்தல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 5,100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  நாட்டில் உள்ள 1,140-க்கும் அதிகமான சுங்கச் சாவடிகளில் பகல் நேரங்களில் பெண்களை பணியமர்த்துவன் மூலம் பயணிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதுடன், சுங்கச் சாவடிகளில் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்க உதவுகிறது.

சுங்கச் சாவடிகளில் கட்டண மையங்களின் சேவைகளை மேற்கொள்பவர்கள், தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானக் கூட்டமைப்பு மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய சங்கங்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் இணக்கமான சூழலில் உறுதி செய்யும் வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய முன்முயற்சிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும். இது போன்ற முன்முயற்சிகள் கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க உதவிடும்.

சுங்கச் சாவடிகளில் பெண் பணியாளர்கள் திறம்ப செயல்பட ஏதுவாக பணியமர்த்தப்பட்ட பெண்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிறப்பு பயிற்சிகளை வழங்குகிறது. அவசரக் கால சூழலை திறம்பட எதிர் கொள்ளுதல், அடிப்படை பாதுகாப்பு நெறிமுறைகள், சுங்கச் சாவடி செயல்முறைகளைப் பராமரித்தல் போன்றவற்றில் பயிற்சி அளிப்பதுடன் பாதுகாப்பான தொழில்முறை சார்ந்த பணிச் சூழலை மேம்படுத்துவதுடன், சேவையின் தரத்தை அதிகரிக்க உதவிடும்.

Leave a Reply