நாகாலாந்தில் உள்ள லுமாமியில் இன்று நடைபெற்ற நாகாலாந்து பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இயற்கை கலாச்சாரம் மற்றும் துணிச்சல் ஆகிய பண்புகளுடன் நல்லிணக்கத்தை உருவாக்கும் இடமாக நாகாலாந்து மாநிலம் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். குடியரசு துணைத்தலைவராக பொற்றுப்பேற்றுக் கொண்ட பின், முதன்முறையாக நாகாலாந்து மாநிலத்திற்கு தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
மாநிலத்தின் உண்மையான வலிமை, மக்களிடமும், மரபு சார்ந்த நடவடிக்கைகளிலும் உள்ளது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் பன்முகத்தன்மை குறித்து எடுத்துரைத்த அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது என்று அவர் கூறினார். உயர்கல்வியில் இப்பல்கலைக்கழகம் அளித்துள்ள சிறப்பான பங்களிப்பிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகம் விரிவான கல்வி சேவைகளை வழங்குவதன் மூலம் இம்மாநிலத்தில் தரமான கல்விக்கான சூழலை வலுப்படுத்தியுள்ளதாக குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை நிறுவுதல், பூர்வீக நாகா மொழிகள் மற்றும் வழக்கமான சட்ட திட்டங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இப்பல்கலைக்கழக்கம் படைத்துள்ள சாதனைகளுக்கு திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.
திவாஹர்
