தேமுதிகவின் நிறுவனர் மறைந்த விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது தம்பி எல்.கே.சுதீஷ் ஆகியோரின் நீண்டகால கனவு தற்போது நனவாகி உள்ளது. ஆம், திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியாகி விட்டது. அதற்கான எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினும், தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஸூம் கையெழுத்திட்டு உள்ளனர். மேலும், சட்டசபைக்கானத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது.
-கே.பி.சுகுமார்., B.E., ullatchithagaval@gmail.com
