உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் பிரச்சாந்த் நாட்டின் பாதுகாப்புத் திறனுக்கு பெருமிதம் சேர்க்கிறது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (27.02.2026) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப்படைத் தளத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் பிரச்சாந்தில் பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர், கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரஃபேல் போன்ற போர் விமானங்களில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற செயல்பாடுகள் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வடிவமைக்கும் நடவடிக்கைகள் உத்வேகம் பெற காரணமாக அமைந்தது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவாவுடன் இந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். இந்திய விமானப்படைத் தளபதி திரு ஏ பி சிங் மற்றும் கமாண்டர் கேப்டன் திரு ஏ மகேந்திர ஆகியோர் மற்றொரு ஹெலிகாப்டரில் அவருடன் பயணம் மேற்கொண்டனர். சுமார் 25 நிமிடப் பயணத்தின் போது காடிசர் ஏரி மற்றும் ஜெய்சால்மர் கோட்டை மீது ஹெலிகாப்டரில் பறந்து சென்று பீரங்கி இருந்த இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து இந்தப் பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு எழுதிய குறிப்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் “பிரசாந்த்“-ல் பறந்து சென்றது தனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்புத் திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ததற்காக இந்திய விமானப்படை மற்றும் ஜெய்சால்மர் விமானப்படைத் தளத்தின் குழுவிற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இன்று மாலை ஜெய்சால்மரில் நடைபெறும் இந்திய விமானப்படையின் “வாயு சக்தி” பயிற்சியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பார்வையிடுகிறார்

Leave a Reply