மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது ஜனநாயக நடைமுறையின் அடிப்படை அம்சமாகும்: குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது ஜனநாயக நடைமுறையின் அடிப்படை அம்சமாகும் என்று குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் காஷ்மீர் பல்கலைக்கழகம் 34-வது இடத்தைப் பிடித்துள்ளதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் 7,700-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இது அந்தப் பல்கலைக்கழக மாணவர்களின் சிறப்பான பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டினார். இம்மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சராக ஒரு பெண் பொறுப்பு வகிப்பதும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒரு பெண்ணும், தங்கப் பதக்கம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் மாணவிகளாக இருப்பதும், ஜம்மு-கஷ்மீரில் மகளிருக்கான அதிகாரம் அளித்தல் மற்றும் முன்னேற்றம் சார்ந்த நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply