தில்லி-என்சிஆர் பகுதியில் காற்று மாசைக் குறைக்க, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் புதிய சட்டப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, குறிப்பிட்ட தொழில்கள் வெளியிடும் துகள்மாசு அளவு இனி அதிகபட்சம் 50 mg/Nm³ ஆக இருக்க வேண்டும்.
இந்த விதிமுறை, அதிக மாசு உமிழும் 17 வகை தொழில்கள், நடுத்தர மற்றும் பெரிய ‘சிவப்பு’ என வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில்கள், உணவு பதப்படுத்தும் தொழில்கள், பாய்லர் கொண்ட துணிநூல் தொழில்கள் மற்றும் உலைகள் கொண்ட உலோகத் தொழில்களுக்கு பொருந்தும். ஏற்கனவே 50 mg/Nm³-க்கும் குறைவான தரநிலை கொண்ட தொழில்களுக்கு இது பொருந்தாது.
அமல்படும் தேதி:
• பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் – 1 ஆகஸ்ட் 2026 முதல்
• பிற தொழில்கள் – 1 அக்டோபர் 2026 முதல்
தொழிற்சாலைகளின் புகை வெளியேற்றம் தில்லி-என்சிஆர் பகுதியில் காற்று மாசின் முக்கிய காரணமாக இருப்பதால், இந்தப் புதிய விதிமுறை காற்றுத் தரத்தை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும், தொழில்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.சதிஷ் சர்மா
