கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!– பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

கடல்சார் சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் மிலன் 2026 என்ற கடற்படைப் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார். சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் பரஸ்பரம் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  இந்தக் கடற்படை பயிற்சியில் 74 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த சில தசாப்தங்களாக சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்றும் கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார். சர்வதேச அளவில் அமைதியைப் பராமரிப்பதில் கடற்படை முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆழ்கடல் பகுதிகளில் உள்ள வளங்களைப் பயன்படுத்துவது குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக அரிய வகை கனிமங்கள் இதில் முக்கிய இடம் வகிப்பதாக அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Leave a Reply