சென்னையில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தது முறையற்றது.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதவித்தொகையை 6,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் செவித்திறன் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாற்றுத்திறனாளிகளின் உரிமையாக இருக்கிறது.
கடந்த 8 நாட்களாக போராடிய நிலையில் நேற்று அவர்களை காவல்துறையினர் கைது செய்து மாநகரப் பேருந்தில் இரவு முழுவதும் அடைத்து வைத்தது மனிதாபிமானமற்றது
தமிழக அரசு கைது செய்யும் அடக்குமுறையை கையாண்டது முறையற்றது.
தமிழக அரசு நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்
