உயர்கல்வித் துறை சார்பில் ரூ.542.02 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.555.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கல்விசார் கட்டடங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.02.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில். அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் 542.02 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனை கட்டடங்கள். மகளிர் விடுதிக் கட்டடம், திறன்மிகு மையங்கள் போன்ற பல்வேறு கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார்.
சி.கார்த்திகேயன்
