இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சேவை, பாதுகாப்பு விமான தர உத்தரவாத சேவை, இந்திய வர்த்தக சேவை பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தனர்.
அப்போது பயிற்சி அதிகாரிகள் இடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், மதிப்புமிக்க பணிகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். பல இளைஞர்கள் தாங்கள் அடைய வேண்டிய இலக்கு குறித்து கனவு கொண்டுள்ளதாகவும், ஆனால் தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற சிலர் மட்டுமே வாய்ப்பை பெறுவதாக தெரிவித்துள்ளார். அதிகாரிகள் பலருக்கு உத்வேகம் அளித்து முன்மாதிரியாக திகழ முடியும் என்று அவர் கூறினார். முன்மாதிரியாக வழிநடத்தக் கூடிய பொறுப்பு அவர்களுடைய பயணம் முழுவதும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் ஒவ்வொரு குடிமகனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், உறுதிப்பாட்டுடன் தங்கள் பணியை விரும்பும்போது, நமது நாடு உலகளவில் வலிமையுடனும், மேலும் திறன்மிக்கதாகவும், அதிக மதிப்புமிக்கதாகவும் தொடர்ந்து வளரும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை அதிகாரிகள் பொது நிதி மற்றும் நிதி விவேகத்தின் பாதுகாவலர்களாக திகழ்கின்றனர் என்று கூறினார். இந்திய வர்த்தக சேவை அதிகாரிகள் முதலீட்டை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பங்களிப்பதன் மூலம் இந்திய வர்த்தகம் புதுமைக் கண்டுபிடிப்புகளுடன் கூடியதாகவும், விரிவானதாகவும், உலகளவில் போட்டியிடக் கூடியதாகவும் அமையும் என்று தெரிவித்தார்.
திவாஹர்
