மத்திய அரசு நிதியுதவியுடன் 157 அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்க ஒப்புதல்.

மருத்துவர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு வசதிகள் பற்றாக்குறையைக் களைவதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத பின்தங்கிய முன்னோடி மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தற்போதைய மாவட்ட மருத்துவமனையுடன் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு நிதியுதவியுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் நடவடிக்கைகள மேற்கொள்கிறது. இதில் வடகிழக்கு மற்றும் சிறப்புப் பிரிவு மாவட்டங்களில் மத்திய- மாநில அரசுகளின் நிதி பகிர்வு 90:10 ஆகும். மற்ற இடங்களில் மத்திய – மாநில அரசுகளின் நிதிப்பகிர்வு 60:40 ஆகும். இத்திட்டத்தின் கீழ் 157 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டன. இதில் 137 மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

Leave a Reply